Friday, February 20, 2009

மழலை காலங்கள்

சிறகு முளைத்த
வண்ணத்துப் பூச்சியாய்..........
துயரங்களே இல்லாமல்
துள்ளிய காலங்கள்.........

கள்ளங்களே இல்லாமல்
உள்ளம் எங்கும் உவகையாய்
உலகை வலம் வர
நினைத்த காலங்கள்..........

வெறுமைகளே இல்லாமல்
வெள்ளை மனமாய், வெகுளியாய்
மிதகுகள் சில செய்து
நிலவில் மிதக்க நினைத்த காலங்கள்........

காகிதத்தில் கப்பல் செய்து
ஓடையிலே விட்டு விட்டு
கர்வமாய் இறுமாந்த
காலங்கள்...........

சுமைகளே இல்லாமல்
சுகமாய் சுதந்திரமாய்
சிரிப்புக்கள் சில
சிதறிய காலங்கள்...........

மழலை காலங்கள்
மழை சாரலாய்
மனதின் ஒருபுறம்......
இனிமையாய் தூறியபடி
எப்பொழுதும்..........

No comments:

Post a Comment